Home » நவ.24 முதல் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடக்கம்

நவ.24 முதல் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடக்கம்

Shooting for 'Arasan' begins from Nov. 24

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் ‘அரசன்’. இதன் படப்பிடிப்பு நவம்பர் 24-ம் தேதி முதல் சென்னையில் தொடங்குகிறது. இதற்காக வட சென்னை போன்று அரங்குகள் அமைக்கும் பணி முடிவடைந்துவிட்டது. இந்த அரங்கில் தான் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.

தாணு தயாரிக்கவுள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியுள்ளனர். முதன்முறையாக இப்படத்துக்கு அனிருத் உடன் இணைகிறார் வெற்றிமாறன். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ப்ரோமோ வீடியோவுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

‘அரசன்’ படத்தின் கதை, ‘வடசென்னை’ படத்தின் காலகட்டத்தில் நடக்கும் கதை எனவும், அந்த கதையில் உள்ள கதாபாத்திரங்கள் இப்படத்திலும் இருப்பார்கள் எனவும் வெற்றிமாறன் பேட்டியொன்றில் கூறியிருந்தார். இதனால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் சிம்பு உடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)