Home » நாட்டின் முதல் தனியார் நிறுவன ராக்கெட் விக்ரம் 1-ஐ அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி

நாட்டின் முதல் தனியார் நிறுவன ராக்கெட் விக்ரம் 1-ஐ அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி

Prime Minister Modi launched the country's first private rocket, Vikram 1

ஹைதராபாத்: ஸ்கைரூட் ஏரோஸ்​பேஸ் நிறு​வனத்​தின் விக்​ரம் 1 ராக்​கெட்டை பிரதமர் மோடி நேற்று அறி​முகம் செய்​தார். அதோடு ஹைதரா​பாத்​தில் ஸ்கைரூட் நிறு​வனத்​தின் இன்ஃபினிட்டி வளாகத்​தை​யும் பிரதமர் மோடி திறந்து வைத்​தார்.

இஸ்ரோ நிறு​வனத்​தின் முன்​னாள் விஞ்​ஞானிகள் மற்​றும் ஐஐடி முன்​னாள் மாணவர்​களால் உரு​வாக்​கப்​பட்ட நிறு​வனம் ஸ்கைரூட் ஏரோஸ்​பேஸ். இது நாட்​டின் முதல் தனி​யார் விண்​வெளி நிறு​வனம். இந்​நிறு​வனம் தயாரித்த விக்​ரம்​-எஸ் என்ற சிறிய ரக ராக்​கெட் கடந்த 2022 நவம்​பர் மாதம் வெற்​றிகர​மாக ஏவப்​பட்​டது.

இந்​நிறு​வனம் தற்​போது செயற்​கைக்கோள்களை புவியின் சுற்​று​வட்​ட​பாதை​யில் நிலை நிறுத்​த கூடிய ராக்​கெட்​டு​களை வர்த்தக ரீதி​யில் அனுப்ப தயா​ராகி​யுள்​ளது. இந்​நிறு​வனம் ஹைத​ராா​பாத்​தில் 2 லட்​சம் சதுர அடி​யில் மிகப் பெரிய வளாகத்தை அமைத்​துள்​ளது.

இன்ஃபினிட்டி என்ற பெயரில் தொடங்​கப்​பட்ட இந்த வளாகத்தை நேற்று காணொளி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்​தார். அதோடு ஸ்கைரூட் ஏரோஸ்​பேஸ் நிறு​வனம் தயாரித்த விக்​ரம் 1 என்ற ராக்​கெட்​டை​யும் பிரதமர் மோடி அறி​முகம் செய்​தார். இந்த வளாகம் மாதத்​துக்கு ஒரு ராக்​கெட்டை உரு​வாக்​கும் திறன் படைத்​தது என அதன் நிறு​வனர் பவன் சந்​தனா கூறி​யுள்​ளார்.

இந்​நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: உலகள​வில் செயற்​கைக்​கோள்​களை விண்​ணில் ஏவுவ​தில் இந்​தியா முன்​னணி நாடாக உரு​வெடுக்​க​வுள்​ளது. நாட்​டின் முதல் தனி​யார் நிறு​வனம் விக்​ரம் 1 ராக்​கெட்டை உரு​வாக்கி சாதனை படைத்​திருப்​பது நாட்​டின் நம்​பகத்​தன்மை மற்​றும் புதுமை கண்​டு​பிடிப்​பின் அடை​யாள​மாக உள்​ளது. விண்​வெளித்​துறை​யின் நம்​பகத்​தன்​மை, திறன், மதிப்பு ஆகிய​வற்​றில் இந்​தியா தனி அடை​யாளத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

ஸ்கைரூட் ஏரோஸ்​பேஸ் நிறு​வனர்​கள் பவன் சந்​தனா மற்​றும் பாரத் டாகா ஆகியோர் நாட்​டில் உள்ள இளைஞர்​களுக்கு மிகப் பெரிய ஊக்​கு​விப்​பாளர்​களாக உள்​ளனர். விண்​வெளித்​துறை​யில் ஸ்கைரூட் போன்ற நிறு​வனங்​கள் முன்​னணி​யில் இருப்பது, இத்​துறை​யில் தனி​யார் நிறு​வனங்​களை வளர்க்க அரசு மேற்​கொண்ட சீர்​திருத்​தங்களுக்கு நேரடி சான்​றாக உள்​ளது.

தற்​போது விண்​வெளித்​துறை​யில் 300-க்​கும் மேற்​பட்ட ஸ்டார்ட் அப் நிறு​வனங்​கள் உரு​வாகி​யுள்​ளன. புதுமை கண்​டு​பிடிப்​பு​கள் சிறு நகரங்​கள் மற்​றும் கிராமங்​களுக்​கும் பரவி​யுள்​ளது. ஸ்டார்ட் அப் நிறு​வனங்​களை மட்​டும் அல்​லாது செமி கண்டக்​டர் ஆலைகள் , டிசைன் மையங்​களும் இந்​தி​யா​வில் உரு​வாகி வரு​கின்றன.

அணு சக்தி துறையை​யும் தனி​யார் நிறு​வனங்​களுக்கு திறந்து விடும் திட்​டங்​கள் மத்​திய அரசிடம் உள்​ளன. விண்​வெளித்​துறை​யில் 5 பெரிய நிறு​வனங்​கள் விரை​வில் உரு​வாக உள்​ளன. ராக்​கெட் ஏவு திறனை மேம்​படுத்​தி, 21-ம் நூற்​றாண்​டை இந்​தி​யா​வின்​ நூற்​றாண்​டாக ஆக்​கு​வது​தான்​ ​லட்​சி​யம்​. இவ்​வாறு பிரதமர்​ மோடி கூறி​னார்​.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)