பாமகவின் முன்னோடி செஞ்சி மே.பெ.சி. இராஜேந்திரன் மறைவுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்த வன்னியர் சங்க துணைத் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவருமான மே.பெ.சி. இராஜேந்திரன் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
வன்னியர் சங்கம் தொடங்கிய போதே அதில் தம்மை இணைத்துக் கொண்டவர். வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றவர். 1987-ஆம் ஆண்டு ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்களுடன் ஒன்றாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட போது அதிலும் பயணித்த அவர், ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட செயலாளராக பணியாற்றியவர். அண்மையில் நடைபெற்ற 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் செஞ்சி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
