பாமக மூத்த நிர்வாகி மே.பெ.சி.இராஜேந்திரன் மறைவுக்கு சௌமியா அன்புமணி கண்ணீர் அஞ்சலி!



விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டமன்றத் தொகுதி முன்னாள் வேட்பாளர், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த முன்னோடியுமான மே.பெ.சி.இராஜேந்திரன் அவர்களின் இறப்பு செய்தியறிந்து, இன்று 23/11/2025 மேல்மலையனூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முனைவர் செளமியா அன்புமணி அவர்கள்.! அப்பொழுது மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சி சிவகுமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் உடன் இருந்தனர்.

