பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு தற்காப்புக் கலைக்கான கௌரவ பிளாக் பெல்ட் வழங்கப்பட்டது!

சென்னை தி.நகரில், உலக அளவிலான தற்காப்புக் கலை கூட்டமைப்பு (WORLD UNIFIED MARTIAL ARTS FEDERATION) சார்பில் 08/11/2025 அன்று நடைபெற்ற பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு தற்காப்புக் கலைக்கான கௌரவ பிளாக் பெல்ட் வழங்கப்பட்டது. அப்போது அவர் தற்காப்பு கலை வீரர்களைப் போல வெண்ணிற உடை மற்றும் கருப்பு பெல்ட் அணிந்து கௌரவ பட்டத்தை பெற்றுக்கொண்டார்..

தற்காப்பு கலைகளின் வளர்ச்சிக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பெரிதும் பங்காற்றியதற்காக கௌரவ பிளாக் பெல்ட் வழங்கப்பட்டதாக உலக ஒருங்கிணைந்த தற்காப்பு கலை சம்மேளனம் அறிவித்தது. மேலும் அவருடன் முனைவர் பெரியண்ணா, முனைவர் மங்கையர்க்கரசி, முனைவர் கலாவதி உள்ளிட்டவர்களுக்கு இந்த கௌரவ பிளாக் பெல்ட் வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் இந்த தற்காப்பு கலையின் வளர்ச்சிக்கு உதவியதாக உலக ஒருங்கிணைந்த தற்காப்பு கலை சம்மேளனம் அறிவித்தது.

இந்நிகழ்ச்சியில் கோபுடோ தற்காப்பு கலையின் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதி வெளியிட்ட தற்காப்பு கலை புத்தகம் வெளியிடப்பட்டது. அப்பொழுது 87 வயதை கடந்த கோபுடோ தற்காப்பு கலையின் மூத்த பேராசிரியர் C.S.ராஜகோபால், பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி, நீதியின் குரல் அமைப்பின் தலைவர் சி.ஆர்.பாஸ்கரன் மற்றும் மருத்துவர் கணேசன் உள்ளிட்ட கராத்தே, குங்ஃபூ, ஜீடோ, சிலம்பம், கலைகளின் மாஸ்டர்கள், மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள், பாமக நிர்வாகிகள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


