Home » பா.ம.க. வின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தான் தேர்தல் கமிஷன் அறிவிப்பு!

பா.ம.க. வின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தான் தேர்தல் கமிஷன் அறிவிப்பு!

PMK leader Dr. Anbumani Ramadoss is the Election Commission's announcement!

பா.ம.க.வின் தலைவராக டாக்டர் அன்புமணி இராமதாசின் பதவிக்கா லம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு 1-ந் தேதி வரை செல்லுபடியாகும் என்று தேர்தல் கமிஷன் அறி வித்துள்ளது. பா.ம.க. தலைவர் பதவி தொடர்பாக மருத்துவர் இராம தாசுக்கும், மருத்துவர் அன்பு மணிராமதாசுக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்து வருகிறது. இருதரப்பில் இருந் தும் இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் முறையிட்டு வந்தனர். பலமுறை கடிதங்கள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில் இந்திய தேர்தல் கமிஷன், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யாவுக்கு ஒரு கடிதம் எழுதி உள் ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்சே

மருத்துவர் அன்புமணி இராமதாஸ்சின் பதவிக்காலம் கடந்த 28-5-2025 அன்று காலாவதியாகிவிட்டது என்றும், புதிய தலைவராக மருத்துவர் சு இராமதாசு தேர்ந்தெடுக்கப் பட்டதாகவும், 30-5-2025 முதல் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் கட்சியின் புதிய தலைவராக இருப்பதாகவும் கடிதங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் பதிவுபடி பா.ம.க. நிர்வாகிகள் பதவிக்காலம் 1-8-2026 வரை செல்லுபடியாகும். மேலும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்சே கட்சியின் தலைவராக உள்ளார்.

நீங்கள் (மருத்துவர் இராமதாசு) கட்சியின் தலைவராக இருப்பதாகக் கூறினால், கட்சியின் நிர்வாகிகள் தொடர்பான விஷயத்தைத் தீர்க்க பொருத்தமான கட்சி அமைப்பு அல்லது தகுதி வாய்ந்த நீதிமன்றத்தை அணுகிக்கொள்ளுங்கள், இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.இந்த கடிதம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும், பா.ம.க. தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த கடிதம் மருத்துவர் இராமதாசு அய்யா தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது தரப்பில் இருந்து கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் 28/11/2025 அன்று டெல்லியில் இந்திய தேர்தல் கமிஷனில் முறையிட்டனர். பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தா ஜி.கே.மணி

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் போலி ஆவணம் மூலம் தேர்தல் கமிஷனை நம்ப வைத்துள்ளார். அதன்பேரில் தேர்தல் கமிஷன் மோசடி செய்துள்ளது. மிகப்பெரிய ஜனநாயக படுகொலையை செய்துள்ளது. இது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. எங்களது கண்டனத்தை பதிவு செய்கிறோம். இதைகட்சியை திருடும் நடவடிக்யாக பார்க்கிறேயம். தேர்தல் கமிஷன் ஜனநாயகத்தை கட்டிக்காக்க வேண்டும். எங்களை நீதிமன்றத்துக்கு போக சொல்வது கண்டனத்துக்குரியது தேர்தல் கமிஷனின் இந்த செயலை கண்டித்து சென்னையில் இருந்து தொண்டர் களை அழைத்து வந்து தேர்தல் கமிஷன் முன் போராட் டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)