பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து வெளியான ‘டியூட்’ படம் ஓடிடியில் ரிலீஸ்!

பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து வெளியான படம் ‘டியூட்’. இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. ரூ.100 கோடி மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியிடப்பட்டது. தற்போது இப்படம் நவம்பர் 14-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘டியூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தின் தமிழக உரிமையினை ஏஜிஸ் நிறுவனம் கைப்பற்றி வெளியிட்டது. தமிழகத்தில் ‘பைசன்’ படத்துடன் வெளியானாலும் வசூல் ரீதியாக இப்படம் பலமடங்கு முன்னால் இருந்தது குறிப்பிடத்தக்கது.
‘டியூட்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அடுத்ததாக டிசம்பர் 18-ம் தேதி ‘எல்.ஐ.கே’ வெளியாகவுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் பிரதீப் ரங்கநாதனுடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

