Home » பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி! தமிழக, கேரள மாநில பாஜகவுக்கு புது சக்தி: பிரதமர் மோடி கருத்து.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி! தமிழக, கேரள மாநில பாஜகவுக்கு புது சக்தி: பிரதமர் மோடி கருத்து.

Bihar Assembly Election Victory! New strength for BJP in Tamil Nadu and Kerala: PM Modi's comments.

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள பாஜக தலைமை அலு​வல​கத்​தில் 14.11.2025 அன்று இரவு பிஹார் தேர்​தல் வெற்றி விழா கொண்​டாடப்​பட்​டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்​கேற்​றார்.

அவர் பேசி​ய​தாவது: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி மாபெரும் வெற்​றியை பெற்​றிருக்​கிறது. ஒட்​டுமொத்த தேசத்​தின் பார்​வை​யும் பிஹார் மக்​கள் மீது திரும்​பி​யிருக்​கிறது. பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பொது​மக்​கள் பெருந்​திரளாக திரண்டு வந்து வாக்​களித்​தனர். வளர்ச்​சிக்கு ஆதர​வாக பிஹார் மக்​கள் வாக்​களித்து உள்​ளனர். முந்​தைய தேர்​தல் வரலாற்று சாதனை​கள் தற்​போது உடைக்​கப்​பட்டு உள்​ளன. தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் பிஹார் மக்​களுக்கு நன்​றியை தெரி​வித்து கொள்​கிறேன். குறிப்​பாக பெண்​கள், இளைஞர்​கள், விவ​சா​யிகளுக்கு நன்​றியை உரித்​தாக்​கு​கிறேன்.

முதல்​வர் நிதிஷ் குமாரின் சீரிய தலைமை தேர்​தல் வெற்​றிக்கு வழி​வகுத்​தது. கூட்​டணி கட்​சிகளின் தலை​வர்​களும் மிகக் கடுமை​யாக உழைத்​தனர். பிஹாரில் அண்​மை​யில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி நடை​பெற்​றது. இந்த நடை​முறைக்கு ஒத்​துழைப்பு அளித்த மக்​களை பாராட்​டு​கிறேன். அதன்​பிறகு மிக அமை​தி​யாக பேர​வைத் தேர்​தல் நடத்​தப்​பட்டு உள்​ளது. தேர்​தல் அலு​வலர்​கள், பாது​காப்​புப் படை வீரர்​கள் மிகச் சிறப்​பாக பணி​யாற்​றினர். எந்​தவொரு பகு​தி​யிலும் மறு​வாக்​குப்​ப​திவு நடை​பெறவில்​லை.

பிஹார் தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது பொய்​கள் பரப்​பப்​பட்​டன. அவற்றை மக்​கள் நம்​ப​வில்​லை. ஜாமீனில் வெளியே நடமாடும் நபர்​களை ஆதரிக்க மாட்​டோம் என்று மக்​கள் திட்​ட​வட்​ட​மாக தீர்ப்​பளித்து உள்​ளனர். தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சி​யில் பிஹார் அதிவேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. இந்த வளர்ச்​சிப் பயணம் தொடரும்.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வெற்​றி​யால் தமிழகம், புதுச்​சேரி, கேரளா, மேற்​கு​வங்​கம், அசாம் மாநிலங்​களின் பாஜக தொண்​டர்​களுக்கு புது சக்தி கிடைத்​திருக்​கிறது. பாஜக தொண்​டர்​களால் முடி​யாதது என்று எது​வுமே இல்​லை. அவர்​கள் மனது வைத்​தால் எதை​யும் சாதிப்​பார்​கள். பிஹாரில் காட்​டாட்சி ஏற்​படு​வது தடுக்​கப்​பட்டு உள்​ளது. மேற்​கு​வங்​கத்​தில் தற்​போது நடை​பெறும் காட்​டாட்​சியை மக்​கள் அகற்ற வேண்​டும். இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

அடுத்த ஆண்டு தொடக்​கத்​தில் தமிழகம், புதுச்​சேரி, கேரளா, மேற்​கு​வங்​கம், அசாம் மாநிலங்​களில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. பிஹார் மாநில தேர்​தல் வெற்​றி,இந்த மாநிலங்​களி​லும்​ எதிரொலிக்​கும்​ என்​று பிரதமர்​ நரேந்​திர மோடி சுட்​டிக்​ ​காட்​டி உள்​ளார்​. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் 14.11.2025 அன்று இரவு பிஹார் தேர்தல் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி மீது மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி கைத்தறி துண்டை தலைக்கு மேலாக சுழற்றி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)