Home » மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த இளைஞரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு: உயர்​நீ​தி​மன்​றம் தீர்ப்பு!

மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த இளைஞரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு: உயர்​நீ​தி​மன்​றம் தீர்ப்பு!

Death sentence of youth who killed student by pushing her in front of a train reduced to life imprisonment: High Court verdict!

சென்னை: பரங்​கிமலை ரயில் நிலை​யத்​தில், மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்​கில், சதீஷுக்கு விதிக்​கப்​பட்ட மரண தண்​டனையை, ஆயுள் தண்​டனை​யாகக் குறைத்​து, சென்னை உயர்​நீ​தி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

சென்​னை, பரங்​கிமலை, காவலர் குடி​யிருப்​பில் வசித்த கல்​லூரி மாண​வி​யும், அதே குடி​யிருப்​பில் வசித்த சதீஷூம் காதலித்து வந்​தனர். பெற்​றோர் எதிர்ப்பு காரண​மாக சதீஷுடன் பேசுவதை மாணவி நிறுத்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில், கடந்த 2022-ம் ஆண்​டு, அக்​.13-ம் தேதி கல்​லூரிக்கு செல்ல பரங்​கிமலை ரயில் நிலை​யம் வந்த மாண​வியை, தாம்​பரம் நோக்கி சென்ற மின்​சார ரயி​லில் தள்​ளி​விட்டு கொலை செய்​த​தாக சதீஷ் கைது செய்யப்பட்டார்.

சிபிசிஐடி பதிவு செய்த இந்த வழக்கை விசா​ரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதி​மன்​றம், சதீஷுக்கு தூக்கு தண்​டனை விதித்​து, 2024-ம் ஆண்டு டிச.30-ம் தேதி தீர்ப்​பளித்​தது. மரண தண்​டனையை உறுதி செய்​வதற்​காக வழக்கு உயர்​நீ​தி​மன்​றத்​துக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது. சதீஷ் தரப்​பிலும் மேல் முறை​யீடு செய்​யப்​பட்​டது.

இந்த வழக்​கை, நீதிப​தி​கள் சதீஷ்கு​மார் மற்​றும் ஜோதி​ராமன் அமர்வு விசா​ரித்​தது. சதீஷ் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர், “தான் காதலித்​தவள் வேறொரு​வரை திரு​மணம் செய்ய ஒப்​புக்​கொண்ட வேதனை​யில் திடீரென ஆத்​திரத்​தில் செய்த செயல். இது ஒரு திட்​ட​மிட்ட செயல் அல்ல. மரண தண்​டனை விதிக்​கத்​தக்க, இது அரி​தி​லும் அரி​தான வழக்​கல்ல என வாதிட்​டார்.

சிபிசிஐடி தரப்​பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் அசன்​முகம்​மது ஜின்​னா, இது திடீரென ஆத்​திரத்​தில் செய்த செயல் அல்ல. இது ஒரு திட்​ட​மிட்ட செயல். 2 நாட்​களாக நோட்​ட​மிட்​டு, 3-வது நாள் ரயில் வரும் வரை காத்​திருந்​து, ரயில் அரு​கில் வந்​தவுடன் தள்​ளி​விட்​டுள்​ளார் என்​ப​தற்கு கண்​காணிப்பு கேமரா காட்​சிகள் உள்​ளிட்ட ஆதா​ரங்​களு​டன் நிரூபித்​துள்​ள​தால், தண்​டனையை உறுதி செய்ய வேண்​டும்.

இது திடீர் தூண்​டு​தலாலோ, உணர்ச்​சிவசப்​பட்டோ நிகழ்ந்​தது அல்ல. அகங்​காரம், பிடி​வாதம் மற்​றும் ஆணா​திக்க உணர்​வில் நடந்த கொடூர​மான, திட்​ட​மிட்ட செயல்.இல்லை என சொல்​வதற்கு உரிமை கொண்ட பெண், தன் எண்​ணத்தை வெளிப்​படுத்​தும் போது அதனால் காயமடைந்த ஒரு ஆணின் அகங்​காரத்​தால் நடந்த கொடூர​மான கொலை” என வாதிட்​டார்.

அனைத்து தரப்பு வாதங்​களும் நிறைவடைந்​ததை அடுத்​து, வழக்​கின் தீர்ப்பை தேதி குறிப்​பி​டா​மல், நீதிப​தி​கள் தள்ளி வைத்​திருந்​தனர். இந்​நிலை​யில், இந்த வழக்​கில் நேற்று தீர்ப்​பளித்த நீதிப​தி​கள், சதீஷுக்கு விதிக்​கப்​பட்ட தூக்கு தண்​டனையை, ஆயுள் தண்​டனை​யாகக் குறைத்து உத்​தர​விட்​டனர். மேலும், 20 ஆண்​டு​களுக்கு எந்த தண்​டனைக் குறைப்​பும் வழங்​கக் கூடாது எனவும் நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)