🏏 டி20 உலகக்கோப்பை : பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது இங்கிலாந்து
🏏 டி20 உலகக்கோப்பை : பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது இங்கிலாந்து
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.
8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ‘சூப்பர்12’ சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா ‘சூப்பர் 12’ சுற்றுடன் வெளியேறியது. முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தையும், 2-வது அரையிறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரிஷ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் சிறப்பாக விளையாடியபோது, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ரிஷ்வான் 15 ரன்களிலும், பாபர் அசாம் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் இறங்கிய ஷான் மசூத் தனது பங்கிற்கு 38 ரன்கள் அடித்த நிலையில் வெளியேறினார். இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.
TELEGRAM: t.me/Agnipuratchi1
இங்கிலாந்து அணியில், சாம் கரன் அபாரமாக பந்து வீச்சு 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் அடில் ரஷித் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியில் பட்லர் சிறப்பாக விளையாடி 26 ரன்களை எடுத்த நிலையில் வெளியேறினார். இதேபோல், ஹாரி புரூக் 20 ரன்கள் எடுத்து அவுட்டானார்
ஆனால் ஒருபக்கம் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி இணை அபாரமாக விளையாடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். பென் ஸ்டோக்ஸ் 49 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மொயின் அலி 19 ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 138 ரன்களை எடுத்து வெற்றி பெற்று உலகக்கோப்பையை வென்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக்கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
