Home » 13 நாட்களில்  27 மாவட்டங்களைச் சேர்ந்த 2293 நிர்வாகிகளுக்கு நியமனக் கடிதம்: மருத்துவர் இராமதாசு அய்யா வழங்கினார்!

13 நாட்களில்  27 மாவட்டங்களைச் சேர்ந்த 2293 நிர்வாகிகளுக்கு நியமனக் கடிதம்: மருத்துவர் இராமதாசு அய்யா வழங்கினார்!

13 நாட்களில்  27 மாவட்டங்களைச்
சேர்ந்த 2293 நிர்வாகிகளுக்கு நியமனக் கடிதம்: மருத்துவர் இராமதாசு அய்யா வழங்கினார்!

பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாவட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்  நியமனக் கடிதங்களை வழங்கி வருகிறார்.

கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி நியமனக் கடிதங்கள் வழங்கும் பணி தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் தொடங்கியது. அன்று முதல் நேற்று அக்டோபர் 15-ஆம் தேதி வரை மொத்தம்  13 நாட்கள் நிர்வாகிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் பணி நடைபெற்றது.

இந்த நாட்களில்  மொத்தம் 27 மாவட்டங்கள், 57 சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த  2293 நிர்வாகிகளுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் நியமனக் கடிதங்களை வழங்கினார்கள்.  அனைவரும் தங்களுக்கான பணியை மற்ற நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்; அதன் மூலம் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று  மருத்துவர் அய்யா அவர்கள் அறிவுரை வழங்கினார்.

இவர்கள் தவிர பாட்டாளி தொழிற்சங்கப் பேரவை, கொள்கை விளக்க அணி, தேர்தல் பணிக்குழு ஆகியவற்றுக்கும் புதிய நிர்வாகிகளை மருத்துவர் அய்யா அவர்கள் நியமித்து அவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார்கள்.

தைலாபுரம், 16.10.2022

error

Enjoy this blog? Please spread the word :)