அக்னிப்புரட்சி இதழ் 12 ஆண்டு விழாவில் சிறந்த ஊடகவியலாளர் விருது பெற்றார் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
அக்னிப்புரட்சி இதழ் 12 ஆண்டு விழாவில் சிறந்த ஊடகவியலாளர் விருது பெற்றார் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
அக்னிப்புரட்சி இதழ் 12 ஆண்டுக்கு விடை கொடுத்து 13-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை பனையூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அக்னிப்புரட்சியின் ஆசிரியர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அக்னிப்புரட்சி நெறியாளருமான பசுமை தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார். விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் கராத்தே பாலகிருஷ்ணன் அவர்களுக்கு சிறந்த ஊடகவியலாளர் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன் நீதியின் குரல் அமைப்பின் தலைவர் சி.ஆர்.பாஸ்கரன் உள்ளிட்ட விருந்தினர்கள் மற்றும் செய்தியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

