அக்னிப்புரட்சி இன்றைய (15.10.2022) முக்கிய செய்திகள்
அக்னிப்புரட்சி இன்றைய (15.10.2022) முக்கிய செய்திகள்.
* வறுமை, குடும்ப சூழல், நிதிப் பற்றாக்குறையால் தமிழ்நாட்டில் 6,718 மாணவர்கள் உயர்கல்வி தொடரவில்லை.
மாணவர்கள் உயர்கல்வியை தொடங்குவதற்கு ஏதுவாக வரும் 20ம் தேதி அனைத்து மாவட்டங்களில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்.
* நாடு முழுவதும் 2024ம் ஆண்டுக்குள் 5ஜி சேவை: நிர்மலா சீதாராமன்
“பிரதமர் மோடி, குறிப்பிட்ட சில நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கி வைத்துள்ளார். 2024ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை வந்து விடும். 5ஜி சேவை இன்னும் பொதுமக்களை சென்றடையவில்லை. இந்தியாவில் தொடங்கப்பட்ட 5ஜி சேவை முற்றிலும் தனித்துவம் மிக்கது. முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
* ஹாரி பார்ட்டர் திரைப்பட நடிகர் மரணம்
ஹாரிபார்ட்டர் திரைப்பட தொடரில் ரூபியஸ் ஹஹ்ரிட் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்காட்லாந்து நடிகர் ரூபி கால்ட்ரனி (72).
இதற்கிடையே, நடிகர் ரூபி கால்ட்ரனி உடல்நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரூபி கால்டரனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வயது முதிர்வு மற்றும் சிகிச்சை பலனின்றி ரூபி கால்ட்ரனி உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
JOIN US: https://t.me/Agnipuratchi1
* கனடாவில் காலிஸ்தான் வாக்கெடுப்பு: இந்தியா கடும் எதிர்ப்பு
பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டுமென சீக்கிய தீவிரவாதிகளின் காலிஸ்தான் அமைப்பு போராடி வருகிறது. இவர்களை ஆதரிக்கும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு, 2ம் கட்ட பொது வாக்கெடுப்பை நவம்பர் 6ம் தேதி, கனடாவில் நடத்த இருக்கிறது. இதற்கு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கனடா அரசிடம் இதை தடுக்கும்படி தெரிவித்துள்ளார்.
* இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கைது செய்தது கடலோர காவல் படை
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 5 பேர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகள் தூத்துக்குடி கொண்டு செல்லப்படுகின்றன
* இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் போராட்டம்:
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம்.
இந்தி திணிப்பு, ஒரே நுழைவு தேர்வு ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தி தெரியாது என உங்களிடம் சொல்லி கொண்டேதான் இருப்போம்.
மீண்டும் இந்தியை திணிக்க முயன்றால் டெல்லியில் போராட்டம் நடத்துவோம்.
2010 தேர்தலில் எப்படி உங்களை விரட்டினோமோ, 2024 தேர்தலிலும் விரட்டுவோம்.
ஒன்றியம் என்று சொன்னால் தான் கோபம் வரும். அதனால் ஒன்றிய அரசு என்று தான் சொல்லுவோம்;
முன்பு போல் இங்கு ஆட்சியில் இருப்பது எடப்பாடி பழனிசாமி அல்ல. இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி -உதயநிதி ஸ்டாலின்,எம்எல்ஏ.
* துருக்கியில் நிலக்கரி சுரங்க வெடிவிபத்து – 40 பேர் பலி
அங்காரா: துருக்கி நாட்டின் பார்ட்டின் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.
அங்காரா, துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதி அருகே அமைந்துள்ள மாகாணம் பர்டின். இந்த மாகாணத்தின் அம்சரா நகரில் நிலக்கரி சுரங்கம் உள்ளது.
இந்நிலையில், அந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மாலை வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்தனர்.
அப்போது, நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த பலரும் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்டனர்.
ஆனாலும், நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர். 110 தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலக்கரி சுரங்கத்தில் இருந்து 11 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
* வேல்முருகனின் மனைவி தற்கொலை முயற்சி:
சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகனின் மனைவி சித்ரா, விஷம் அருந்தி தற்கொலை முயற்சி.
சித்ரா ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
* சென்னை மாநகராட்சி 2022-2023 அரையாண்டுக்கான சொத்துவரி செலுத்தி ஊக்கத்தொகை பெற இன்று கடைசி நாள்
சொத்து வரியை இன்றைக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை வழங்கப்படும்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 5 இலங்கை மீனவர்கள் கைது
ஒரு படகையும் பறிமுதல் செய்து இந்திய கடற்படை நடவடிக்கை
* முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் 91வது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மரியாதை
இராமேஸ்வரம் அடுத்த பேய்கரும்பில் உள்ள நினைவிடத்தில் குடும்பத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் மரியாதை
* பாட்னா: மீதமுள்ள இந்தியாவை பாரதிய ஜனதா கட்சி விரைவில் பெருமுதலாளிகளுக்கு விற்றுவிடும் என லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
உலக பட்டினி குறியீட்டில் இந்தியா 107வது இடத்தை பிடித்துள்ளதை சுட்டிக்காட்டி பீகார் முன்னாள் முதல்வர் லாலு கருத்து தெரிவித்திருக்கிறார். சூடான், ரவாண்டா, நேபாளம், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளை விட இந்தியா பின் தங்கியுள்ளது என லாலு குறிப்பிட்டுள்ளார்.
* ஈரோடு மாவட்டம் கோபி கணக்கம்பாளையம் – பகவதி அம்மன் கோயில் செல்லும் சாலையில் தரைப்பாலம் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது.
தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் 2 கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வெள்ளக்காடாக மாறியது.
குடியிருப்புகள், விளைநிலங்களை வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளை வெள்ளம் மூழ்கடித்தது. இதன் காரணமாக அந்தியூர் – பவானி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
* சின்ன வெங்காயம் கிலோ ரூ.100ஆக உயர்வு
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் காய்கறிகளின் விலை கடும் உயர்வு
குறிப்பாக பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் தக்காளி சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது
இதனால் தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ள பொதுமக்கள் மிகுந்த மன வேதனையில் உள்ளார்கள்
சில இடங்களில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* உலக பட்டினிக் குறியீடு : 121 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியாவுக்கு 107 ஆவது இடம்
இலங்கை – 64 , வங்கதேசம் – 84 , நேபாளம் – 81 , பாகிஸ்தான் – 99
* தங்கம் விலை குறைவு:
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ரூ. 37,520 க்கு விற்பனை.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,690 ஆக உள்ளது.
* பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து வரும் 17 ஆம் தேதி சட்டப்பேரவை நோக்கி நடைபெற இருந்த நடைபயணம் ஒத்திவைப்பு.
அமைச்சர்களுடன் இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையை ஏற்று இந்த முடிவு.
எங்கள் கோரிக்கைகளை ஏற்று முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று மாற்று வழி குறித்து ஆலோசிப்பதாக அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர்-பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழு.
* மேட்டூர் அணையில் இருந்து 1.10 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர் நீர் வரத்து காரணமாக, நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு
* உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று: ஜோ பைடன்
உலகளவில் மாறிவரும் அரசியல் சூழ்நிலை குறித்த தனது உரையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து.
* பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா இருக்கும்: RBI ஆளுநர்
நம் நாட்டின் பொருளாதார நிலையில் கலவையான அறிகுறிகள் தென்பட்டாலும், பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து வேகம் எடுத்துள்ளன. உலக அளவிலான அரசியல் நிலவரங்கள், சவால்களை உண்டாக்கி வருகின்றன. அதையும் மீறி, நடப்பு நிதிஆண்டில், பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும்” என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
* ரப்பர் ஸ்டாம்பாக செயல்பட மாட்டேன்: மல்லிகார்ஜுன கார்கே
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ள மல்லகார்ஜுன கார்கே, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் வாக்குகளை சேகரித்தார். அப்போது அவர், ”காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளே எனது வாக்குறுதி. ரப்பர் ஸ்டாம்பாக செயல்பட மாட்டேன். கட்சியை வலுப்படுத்துவேன். ஒரு குடும்பம், ஒரு பதவி கொள்கையை அமல்படுத்துவேன்” என்றார்.
* சென்னையில் மாணவி சத்யாவுக்கு நடந்த துயரத்தை அறிந்து நொறுங்கி போயுள்ளேன்.
இதுவல்ல நாம் காண விரும்பும் சமூகம்; தமிழ்நாட்டில், இனி எந்த பெண்ணுக்கும் இதுபோல நடக்காமல் தடுக்க வேண்டிய கடமை ஒரு சமூகமாக நமக்கு உள்ளது -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* மகளிர் ஆசிய கோப்பையை 7 வது முறையாக வென்றது இந்திய அணி.
டாஸ் வென்று முதலில் விளையாடிய இலங்கை அணி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் மட்டுமே எடுத்தது.
8.3 ஓவரில் இந்திய மகளிர் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்து ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
7th Title for 🇮🇳India in Women’s Asia Cup
🏆2004
🏆2005
🏆2006
🏆2008
🏆2012
🏆2016
🏆2022
JOIN US: t.me/Agnipuratchi1
* இந்தி திணிப்பு என்பது பொய்…
எதை வைத்து இந்தி திணிப்பு என்று போராட்டம் நடத்துகிறார்கள் அதற்கான ஆதாரம் உள்ளதா? முதலமைச்சர் விளக்கம் கொடுக்க வேண்டும்.
உதயநிதி ஸ்டாலின் தான் தமிழ் படங்களை திரையிட விடாமல் ஆயிரம் தியேட்டர்களை Block செய்து இந்தி படங்களை ரிலீஸ் செய்கிறார். இந்தி திணிப்பது திமுக தான்.
– பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..
* நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்…
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 5 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.
சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை
* கர்நாடகாவில் 2.5 லட்சம் அரசு பணியிடங்கள் ஏன் காலியாக உள்ளன?
பணம் இருந்தால் கர்நாடகாவில் அரசு வேலை வாங்கலாம். பணம் இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் வேலையில்லாமல் இருக்கலாம்” – காங்., எம்பி ராகுல் காந்தி.
* ஓ.பி.எஸ். பண்ணை வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை – மர்ம நபர்கள் கைவரிசை.
பணம் நகை எதுவும் இல்லாததால் 53 இன்ச் எல்.இ.டி.டிவியை திருடி சென்றுள்ளனர்.!
* எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அந்த பகுதி மக்களை இணைக்கவில்லை என்றால் அது வெற்றி அடையாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் தாங்களே சிறந்த அறிவுஞானம் கொண்டவர்கள் என எண்ணி எந்த ஒரு திட்டத்தையும் விவசாயிகளிடம் திணிக்க முடியாது. கிராமங்களுக்கு எது சிறந்தது என்பது அந்தந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகளுக்கே நன்றாக தெரியும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.
* மூன்று குழந்தைகள் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே குன்னுத்துப் பட்டியில் கண்மாயில் மூழ்கி மூன்று பள்ளி குழந்தைகள் உயிரிழப்பு – உடலை மீட்டு போலீசார் விசாரணை.
* ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அவர்களின் திறமையால், நம் அனைவரையும் பெருமைப்படுத்துகிறது. அவர்கள் சிறந்த திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்; வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
* சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் புத்தாடை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளி பண்டிகைக்கு ஒரே வாரமே உள்ளதால், வேண்டிய பொருட்களை மக்கள் ஆர்வமுடன் தேடி தேடி வாங்குகின்றனர்.
* சாலை மறியல் – தீட்சிதர்கள் கைது:
சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம் செய்து வைத்த விவகாரம் – கோயில் செயலாளர் கைது.
செயலாளர் கைதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 70க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் குண்டுகட்டாக கைது.
சாலை மறியல் – தீட்சிதர்கள் கைது
சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம் செய்து வைத்த விவகாரம் – கோயில் செயலாளர் கைது.
செயலாளர் கைதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 70க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் கைது.#Chidambaram #TamilNadu #ChidambaramTemple pic.twitter.com/L4w8t2G1RT
— Seithikathir (@TheSeithikathir) October 15, 2022
* ஒரு வாரத்திற்கு முன் வந்த சிறிய மழைக்கே தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை இந்த முறையும் மழையால் தத்தளிக்கும்.மழைக்காலத்திற்கான உரிய நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்கவில்லை” -பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
* நீதி கிடைப்பதில் தாமதம் என்பது மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாக உள்ளது; புதிய சட்டங்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாக எழுதப்பட வேண்டும் – அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
* இன்றைய சிந்தனை: ‘காம்போ!’
சென்னையில் உள்ள பிரபல பெற்ற ஹோட்டலுக்கு போயிருந்தேன். இரண்டு இட்லி ஒரு வடை கேட்டேன். ‘காம்போ ஏதும் சாப்பிடுறீங்களா?’ சார் என்று கேட்டார் சர்வர் . எனக்கு புரியவில்லை. ‘அப்படின்னா சார்?’ என அப்பாவியாக கேட்டேன். காம்போன்னா, அதை மினி டிபன் என்பதும் உண்டு, ‘இட்லி, வடை, கொஞ்சம் பொங்கல் இருக்கும்’ ஒரு பூரி அல்லது சின்ன மசால்தோசை மினி காபி இவ்வளவும் வரும் என்றார்.
புதுசாக இருக்கே! என வாங்கி சாப்பிட்டேன். இன்று இந்த ஹோட்டலில் மட்டுமல்ல… காம்போ இல்லாத ஹோட்டல்களே இல்லை என்றே கூறலாம். இப்போ இதை எதுக்கு சொல்றேன்னா….
எங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென நெஞ்சுவலி. சென்னையில் அண்ணா நகரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பரிசோதனைகள் முடிந்ததும், மருத்துவமனை தரப்பில் இருந்து பேசினார்கள். ‘உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ செய்யணும். காம்போ- வாக எடுத்துக்குறீங்களா?’ என்று கேட்டார்கள். எனக்கு சட்டென்று பிரபல ஹோட்டல் தான் நினைவுக்கு வந்து போனது. ஒருவேளை சாப்பாடும் சேர்த்து போடுவாங்களோ என யோசித்தபடி அவர்களிடம் தொடர்ந்து பேசினேன்.
JOIN US: https://t.me/Agnipuratchi1
இந்த காம்போவில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்ட், ஐசியு, சிசியு, டாக்டர் பீஸ் எல்லாம் சேர்த்து மூன்று லட்சம் வரும்! இதுவே நீங்க தனித்தனியா எடுத்துகிட்டா அதிகம் ஆகும்!’ என்று சொன்னார்கள். எனக்கு மிரட்சியாக இருந்தது.
அந்த மருத்துமனையில், ஹார்ட்க்கு, டெலிவரிக்கு, கிட்னிக்கு லங்ஸ்க்கு என தனித்தனி காம்போ இருக்கிறது. அந்த மருத்துமனையில் மட்டுமல்ல… சென்னையில் பல மருத்துவமனைகளில் இந்த காம்போ சிஸ்டம் இருக்கிறதாம்!
ஒரு கல்யாணம் காட்சி என்றால், மண்டபம், புரோகிதர், சாப்பாடு,அலங்காரம், வாழைமரம், சிட்டிங் அரேஞ்மெண்ட், வரவேற்பு வரை காம்போதான். சாப்பிடும் போது தண்ணீர் பாட்டில் மூடியை திறந்து கொடுப்பதுவும் காம்போவில் அடங்கும்.
இதுகூட பரவாயில்லை, ஒரு மனிதர் இறந்து போய் விட்டால், அதற்கும் காம்போதான். தேங்காய் உடைத்து தலைமாட்டில் வைப்பதிலிருந்து, மாலை, ஐஸ்பாக்ஸ், சவ ஊர்வல ஏற்பாடு, வெட்டியான் செலவு, ஷாமியானா, நாற்காலிகள், காபி உபசரனை எல்லாமே காம்போ தான். இறந்தவற்காக அழமட்டும் நாம்தான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
மனிதனின் உயிருக்கு அவ்வளவுதான் மரியாதை. காலப்போக்கில் எல்லாமே காம்போவாக வந்துவிடும். வாழ்க்கையும் காம்போவிலேயே முடிந்துவிடும். இதுதான் வாழ்க்கை. இவ்வளவுதான் வாழ்க்கை. அதற்குள்தான் எவ்வளவு போட்டிகளும் பொறமைகளும்!
மனசுக்குள்ள இருக்கும் ‘ அழுக்கு, போட்டி, பொறமை, குரோதம்’ என்ற காம்போவை தூக்கி தூர வெச்சுட்டு, இருக்கிற வரைக்கும் ‘அன்புகாட்டுவது, உதவி செய்வது, நல்லதை நினைப்பது..’ என்ற காம்போவை மட்டும் செலெக்ட் பண்ணி பாருங்க… சந்தோஷம் என்பது நீங்களே விரட்டினாலும் உங்களை விட்டுப் போகாது.
