Home » அக்னிப்புரட்சி இன்றைய (18.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (18.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (18.10.2022) முக்கிய செய்திகள்.

* விபரீதத்தில் முடிந்த விளையாட்டு:
உத்தரப்பிரதேசம்: பூர்வாஞ்சல் சாலையில், 300 கி.மீ. வேகத்தில் காரை ஓட்டும் முயற்சியில் நிகழ்ந்த கோர விபத்தில், மருத்துவர் ஆனந்த், அவரது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழப்பு.

230 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்த கார், கண்டெய்னர் லாரி மீது மோதியது; வேகமாக சென்றதை ஃபேஸ்புக்கில் லைவ் செய்துள்ளனர்.

* நடப்பாண்டிற்கான சர்வதேச புக்கர் பரிசை வென்றார் இலங்கையை சேர்ந்த எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக.

இவர் எழுதிய ”மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள்” என்ற நாவலுக்கு புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

* நாகப்பட்டினத்தில் அரசு மருத்துவரையும், அவரது தாயையும் க்ளினிக்குக்குள் புகுந்து திமுக நிர்வாகி ஒருவர் தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ: https://twitter.com/IndiaNewsDigest/status/1582213015549534208?t=QNZgFVginPE7EcxHbv3miw&s=19

நாகப்பட்டினம் பெரிய கடை வீதியில் சித்த மருத்துவர் ஆறுமுகம் என்பவர் ஒரு கிளினிக் வைத்துள்ளார். அதன் அருகிலேயே அமிர்தாலயா என்ற பெயரில் மெடிக்கல் ஷாப்பும் வைத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவராக ஆறுமுகம் பணியாற்றி வருகிறார். ஒரு நிலம் தொடர்பாக சித்த மருத்துவர் ஆறுமுகத்திற்கும், பழக்கடை நடத்தி வரும் சண்முகம் மற்றும் அவரது மகன் மணிமாறன் ஆகியோருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இந்த நிலப்பிரச்சினை தொடர்பாக ஆறுமுகம் நாகை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின்பேரில் இரு தரப்பையும் விசாரணைக்காக போலீசார் அழைத்தனர். சண்முகம் தரப்பினர் தனக்கு ஆதரவாக பேசுவதற்காக திமுக வார்டு செயலாளர் பாபுவை அழைத்து வந்துள்ளனர். காவல் நிலையத்தில் வைத்து பாபு நடத்திய பேச்சுவார்த்தைக்கு மருத்துவர் ஆறுமுகம் உடன்படவில்லை எனக்கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த திமுக நிர்வாகி பாபு தன்னுடைய அடியாட்களுடன் சித்த மருத்துவ கிளினிக்கிற்கு சென்று அங்கிருந்த கண்ணாடியை உடைத்தார். அதை தடுக்க வந்த மருத்துவர் ஆறுமுகம், அவரது தாய் சாந்தி ஆகியோரையும் தாக்கினார்.

இந்த நிலையில் திமுக நிர்வாகி அடியாட்களுடன் சென்று கிளினிக்கை அடித்து நொறுக்கி தாக்குதலில் ஈடுப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதல் குறித்து திமுக வார்டு செயலாளர் பாபு மீது கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

6 மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

* சட்டமன்றத்தில் கடும் அமளி:
இபிஎஸ், ஓபிஎஸ் அருகருகே அமர்ந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளி.

எதிர்கட்சி துணைத்தலைவராக உதயகுமார் நியமனத்தை அங்கீகரிக்க கோரி சபாநாயகரிடம் இபிஎஸ் வாக்குவாதம்.

அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்களை சபை காவலர்களை கொண்டு வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவு.

* மதுரை வைகை அணையிலிருந்து விநாடிக்கு 7,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தரைப்பாலம் மூழ்கியதையடுத்து வைகை ஆற்றின் கரையோரத்தில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை

தேனி, பெரியகுளத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வராக நதியில் வெள்ளப்பெருக்கு

கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல பொதுப்பணித்துறை அறிவுறுத்தல்.

* பாலியல் புகாரில் சிக்கிய அந்தமான் நிகோபார் அரசு தலைமை செயலர் சஸ்பெண்ட்..

அந்தமான் நிகோபார் அரசின் தலைமை செயலராக இருந்தவர் ஜிதேந்திரா நாராயண், இவர் மீது கடந்த ஜூலை மாதம் 21 வயது இளம் பெண் போலீசில் புகார் கொடுத்தார்.

அதில் தன்னை ஜிதேந்திரா நாராயண், தொழிலாளர் கமிஷனர் ஆகிய இருவரும் சேர்ந்த கூட்டு பலாத்காரம் செய்ததாக அந்த புகாரில் கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் அதன் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து ஜிதேந்திரா நாராயண் கடந்த ஆகஸ்ட் மாதம் இடமாற்றம் செய்யப்பட்டு டில்லியில் பணிக்கு அழைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவரை சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சிறப்பு விசாரணை குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே அந்தமான் நிகோபார் அரசு புதிய தலைமை செயலராக 1995-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். கேடரான கேசவ் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.

JOIN US: https://t.me/Agnipuratchi1

* என்னை அவமதித்தால் அமைச்சர் பதவியை காலி செய்து விடுவேன் கவர்னர் எச்சரிக்கை..

திருவனந்தபுரம்: கேரள அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் நேற்று டிவிட்டரில், ‘முதல்வரும், அமைச்சரவையும் கவர்னருக்கு அறிவுரை கூற எல்லா உரிமையும் உண்டு.

ஆனால் கவர்னர் பதவிக்கு களங்கம் ஏற்படும் வகையில் சில அமைச்சர்கள் என்னை அவமரியாதையாக பேசி வருகின்றனர்.

இது ஏற்கத்தக்கதல்ல. அமைச்சர்களின் இந்த நடவடிக்கை தொடர்ந்தால் மந்திரி பதவியை ரத்து செய்யவும் தயங்க மாட்டேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

கவர்னரின் இந்த அசாதாரணமான கருத்து கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவர்னரின் இந்தக் கருத்துக்கு கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் ராஜேஷ், இடது முன்னணி ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன் மற்றும் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

* மத்திய அரசுக்கு ஆதரவாக, இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்திற்கு எதிராக செயல்பட திட்டமிட்டுள்ளீர்கள்

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை கண்டு பயந்துவிட்டீர்கள்

1989ல் நடந்ததைபோல மீண்டும் நடத்த திட்டமிட்டுள்ளீர்கள் – சபாநாயகர் அப்பாவு

உங்கள் நடவடிக்கைகளை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் – சபாநாயகர் அப்பாவு

ஈபிஎஸ் தரப்பு அதிமுக உறுப்பினர்கள் மீது சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவி. பிற பதவிகள் கட்சிகளின் விருப்பத்துக்கேற்பவே உள்ளன.

சபையில் இருக்கைகள் ஒதுக்குவது எனது முடிவு; அதில் யாரும் தலையிட முடியாது- சபாநாயகர் அப்பாவு.

தனக்கான இருக்கையை மாற்றித்தர வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் கேட்பதற்கு உரிமை உள்ளது.

ஆனால் வேறு ஒருவருக்கான இடத்தை மாற்றுங்கள் என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது- சபாநாயகர் அப்பாவு.

அதிமுக ஆட்சியில் கேள்வி நேரத்தை நடத்தவிடாமல் திமுக கலகம் செய்ததில்லை. அமளியில் ஈடுபட்டது ஏற்புடையதல்ல

இன்றைய அவை நடவடிக்கைகளில் அதிமுகவினர் கலந்துகொள்ள வேண்டாம்- சபாநாயகர் அப்பாவு.

* முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது

* முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் வி.கே. சசிகலா, கே எஸ் சிவகுமார்,
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்.

ஆகிய நான்கு பேர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டன – ஆறுமுகசாமி ஆணையம்.

2012ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும்,சசிகலாவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை.

ஜெ-வுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு தாமதமின்றி அழைத்து சென்றுள்ளனர்.

அதன் பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டன -ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தகவல்.

அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார்; ஆனால் அது நடக்கவில்லை- அறிக்கையில் தகவல்.

எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை.

சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது- ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பரபரப்பு தகவல்.

* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை-ஆணையத்தின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றது தமிழ்நாடு அரசு.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, மாவட்ட ஆட்சியராக இருந்தவர் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை.

17 காவல்துறையினர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க விசாரணை ஆணையம் பரிந்துரை.

* ஆர்.எஸ்.எஸ்.பேரணி – திருமாவளவன் மனு தள்ளுபடி.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விசிக தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளித்து செப்டம்பர் 22ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

* இந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்:

அமித்ஷா குழுவின் பரிந்துரைகள், இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான் என்று பாஜக நினைக்கிறது; ஒரே நாடு ஒரே மொழி என்ற பெயரில் பிற தேசிய மொழிகளை அழிக்க முயற்சி.

ஆங்கிலத்தை மொத்தமாக அகற்ற பாஜக அரசு முயற்சி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முழுக்க முழுக்க இந்திக்காகவே துடிக்கிறது மத்திய அரசின் இதயம்.

* தொடர் வண்டி எண்: 07685/86 தீபாவளி சிறப்பு செகந்திராபாத் – தஞ்சை வரை இரு சேவைகள் மட்டும் இயங்க உள்ளது.

அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் செகந்திராபாத் – தஞ்சை இடையேவும்.

அதே போல அக்டோபர் 24 மற்றும் 31 இடையே தஞ்சை – செகந்திராபாத்  இடையே இயங்க உள்ளது. இதற்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நாளை காலை 10 மணிக்கு அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு

எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

* ஜெயலலிதா மரணம் தொடர்பான முன்னாள் நீதி அரசர் திரு ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை…..

“நரிகள் கொன்று விடும்”

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமியின் அறிக்கையின் இறுதியில் இடம் பெற்ற 2 திருக்குறள்.

* கேதார்நாத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கேதார்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர், மோசமான வானிலையால், கீழே விழுந்து நொறுங்கியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவர்களில் பிரேம்குமார், கலா, சுஜாதா ஆகிய 3 பேரும் சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர்கள் என உத்தராகண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.

* ஆதீன மட சொத்துக்கள்  தனியாருக்கு ஒத்திக்கு விடப்பட்ட ஆவணங்களை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது.

ஆதீன மடங்கள் மடங்களாக செயல்படுகிறதா? இல்லை வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா? -உயர்நீதிமன்ற மதுரை கிளை.

ஆதீன மட சொத்துக்களை ஒத்திக்கு விடுவதற்கு எந்த சட்டம் அனுமதிக்கிறது?;

நடவடிக்கை எடுக்க இந்துசமய அறநிலைய துறைக்கு அதிகாரம் உள்ள நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை -உயர்நீதிமன்ற மதுரை கிளை.

* கேதர்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

உயிரிழந்த சென்னையை சேர்ந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

உயிரிழந்தவர்களின் உடல்களை சென்னைக்கு விரைந்து கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இரு மாநில அரசுகளும் இணைந்து மேற்கொண்டு வருகிறது – முதல்வர்.

* ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையில் நான் ஒருபோதும் தலையிட்டது கிடையாது – சசிகலா அறிக்கை.

*;நாளை நடத்த திட்டமிட்டிருந்த அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு.

வள்ளுவர் கோட்டத்தில் ஈபிஎஸ் தலைமையில் நாளை நடைபெறவிருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.

சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக அனுமதி மறுப்பு என காவல்துறை விளக்கம்.

போராட்டத்திற்கு அனுமதி வழங்கக்கோரி முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு.

JOIN US: https://t.me/Agnipuratchi1

error

Enjoy this blog? Please spread the word :)