அக்னிப்புரட்சி இன்றைய (24.1.2022) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (24.1.2022) முக்கிய செய்திகள்.
* அடுத்த 10 நாட்களுக்கு சென்னை பகுதியில் மற்றும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட குளிர்ந்த காற்று வீசும்
* கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி.
காய்ச்சல் காரணமாக கமல்ஹாசன் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதி
* 50GB இலவச டேட்டா – பொதுமக்களுக்கு எச்சரிக்கை
உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க இலவச டேட்டா தருவதாக சமூகவளைதளங்களில் வரும் பதிவு மற்றும் இணைப்பு போலியானது.
50GB டேட்டா தருவதாக கூறும் ஆசைவார்த்தைகளை நம்பி, எந்த இணைப்பையும் கிளிக் செய்யாதீர்கள்.
அவ்வாறு செய்தால் உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளது-பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை.
* சீனாவில் கொரோனா புதிய உச்சம்:
சீனாவில் கொரோனா மீண்டும் பரவி வரும் நிலையில் புதிய உச்சமாக ஒரேநாளில் 31,354 பேருக்கு பாதிப்பு.
சீனாவில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு, பெரிய அளவில் சோதனை, பயண கட்டுப்பாடுகள் விதிப்பு.
* அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-3 ஏவுகணை.. எதிரியை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து அதிமுக்கிய சோதனை ஒன்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நிகழ்த்தி உள்ளது.
நேற்று நடத்தப்பட்ட இந்த சோதனையில் ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து அக்னி-3 பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவப்பட்டது. ராக்கெட் சோதனை வெற்றிகரமாக இருந்ததாகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
* காவல்துறை மீதான புகார்களை விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சிபிசிஐடி போலீசார் 6 மாதத்திற்குள் புகாரை விசாரித்து முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த ஆணையம் விதிமுறைகள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
* அக்னிப்புரட்சி இதழின் வளர்ச்சி குறித்து ஆசிரியர் த.நாராயணசாமி அவர்கள் மற்றும் செய்தியாளர்கள் இன்று (24.11.2022) நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அய்யாவிடம் ஆலோசனை பெற்றோம். உடன் செய்தியாளர்கள் திருவண்ணாமலை மாவட்டச் செய்தியாளர் சி.சுரேஷ், போளூர் செய்தியாளர் பூ.லட்சுமணன், திருவேற்காடு செய்தியாளர் த.முருகன் உள்ளிட்டோர் இருந்தனர்.
* பன்னாட்டு மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்கள், வீராங்கனைகள்.
தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
190 வீரர்களுக்கு 4 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
* புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள்? -மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கேள்வி.
4 அதிகாரிகளில் அருண் கோயலை தேர்வு செய்தது எப்படி என்பது குறித்து அரசு வழக்கறிஞர் விளக்க வேண்டும் – நீதிபதி ஜோசப்.
கடந்த மே மாதம் காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவி, நவம்பர் 17-ல் உச்சநீதிமன்றம் வழக்கை விசாரிக்க தொடங்கிய பிறகு நிரப்பப்பட்டுள்ளது.
* சிபிஐ விசாரனைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மேல்முறையீடு.
மனு மீது பதிலளிக்க தமிழக அரசு மற்றும் எதிர் மனுதாரர் காதர் பாட்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.
* 2001- 02 கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு.
செமஸ்டர் தேர்வு நடைபெறும் போது தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
* காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்எல்ஏ ரூபி மனோகரன் தற்காலிகமாக இடைநீக்கம் – காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு
* ஏ ஃநடிகர் விஜயின் வாரிசு படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்
அனுமதி பெறாமல் 5 யானைகளை பயன்படுத்தி காட்சிகள் படமாக்கப்பட்டதாக வந்த புகாருக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவு
* சத்யமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதல் தொடர்பாக ரூபி மனோகரன் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை;
அவர் உரிய பதில் அளித்த பிறகு அவர் மீதான நடவடிக்கையை திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும்”
அடுத்து நடைபெறவுள்ள குழு கூட்டத்தில் தாங்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
அதுவரை ரூபி மனோகரன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம்”
– காங். ஒழுங்கு நடவடிக்கை குழு
கட்சியிலிருந்து நீக்கியது வேதனை அளிக்கிறது கட்சியை வளர்க்க வேண்டும் என்ற என் ஆசையில் மண் அள்ளி போட்டுவிட்டார்கள்”
– ரூபி மனோகரன்
* தமிழ்நாடு, புதுவை & காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நவ.28ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு;
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்
– வானிலை ஆய்வு மையம்
* பாஜகவிடம் முன்னதாகவே அதிமுகவினர் அடிமை சாசனத்தை எழுதி கொடுத்துவிட்டனர்.
அவர்கள் மீண்டு வருவதற்கு தயாராகவும் இல்லை. வாய்ப்பும் இல்லை – தூத்துக்குடி திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் எம்பி கனிமொழி பேச்சு
* கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நாளை ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை உத்தரவை ரத்து செய்ய கோரி யுவராஜ் உட்பட 10 பேர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு.
* தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த அக்.19ம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
ஆளுநரின் கேள்விகளுக்கு தமிழக அரசு சார்பில் இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்கப்படும் என தகவல்.
* சமந்தா வீட்டில்தான் இருக்கிறார்! வதந்திகளை நம்பாதீர்!
நடிகை சமந்தா உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி என செய்திகள் வெளியாகின. இது குறித்து விளக்கம் அளித்துள்ள சமந்தாவின் செய்தி தொடர்பாளர், “ஐதராபாத்தில் உள்ள வீட்டில் நடிகை சமந்தா ஓய்வில் இருக்கிறார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் வதந்தி” என்றார்.
* ‘விசிக கட்சிக்குள் சனாதனம்’ என பேசிய பெண் நிர்வாகி: மைக்கை ஆப் செய்த நிர்வாகி
சனாதனம் எதிர்ப்பு குறித்து அழுத்தமாக பதிவு செய்பவர் திருமாவளவன். இந்நிலையில் விசிக மகளிர் இயக்கம் சார்பில், திருமாவளவன் மணி விழாவுக்கான தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மகளிர் மாநில செயலாளர் நற்சோனை, “விசிக நிர்வாகிகள் பெண்களை கேவலமாக திட்டுகிறார்கள். கட்சிக்குள்ளேயே சனாதனம் இருக்கிறது” என கூறியபோது, ஆண் நிர்வாகி ஒருவர் மைக்கை ஆப் செய்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
* ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட கால்பந்து வீரர் ரொனால்டோ: ரூ.50 லட்சம் அபராதம்
22வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கால்பந்து வீரர் ரொனால்டோ, ரசிகரின் மொபைலை தட்டிவிட்டதற்காக ரூ.50 லட்சம் அபராதம், 2 கிளப் ஆட்டத்தில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த ஏப்ரலில் நடைபெற்றது. தற்போது அவர் மான்செஸ்டர் அணியில் இருந்து வெளியேறிய நிலையில் அடுத்து இணையும் கிளப்பில் இந்த தடை தொடரும் என கூறப்பட்டுள்ளது.
* ட்விட்டரில் அறிமுகமாகும் புதிய சேவை
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து ஊழியர்கள் பணிநீக்கம், சலுகைகள் குறைப்பு உள்ளிட்ட மாற்றங்களை செய்து வருகிறார். இந்நிலையில், ட்விட்டர் தளத்தில் நேரடி மெசேஜ் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும் என்று அவர் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் ட்விட்டர் கணக்குகளுக்கு இடையே என்க்ரிப்ட் செய்யப்பட்ட காணொளி, வாய்ஸ் கால் ஆகியவைகளை புதிய சேவைகளாக சேர்க்கும்படி கூறியுள்ளார்.
* கமல்ஹாசன் உடல்நிலை சீராக உள்ளது.
கமல்ஹாசனின் உடல் நிலை சீராக உள்ளது; ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்
கமல்ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
லேசான காய்ச்சல் காரணமாக நடிகர் கமல்ஹாசன் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .
* மஞ்சளைபோல மஞ்சள் பையும் நல்லது – நீதிபதி
தமிழ்நாடு அரசின் மஞ்சள் பை திட்டம் குறித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி மகாதேவன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “மஞ்சள் மலிந்திருக்க மரணம் தணிந்திருக்கும் என ஒரு பழமொழி உண்டு. மஞ்சள் எவ்வளவு நல்லதோ அதேபோல மஞ்சள் பையை பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கு மிகவும் நல்லது. தமிழ்நாடு அரசின் மஞ்சள் பை திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார்.
* அரியர் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு!
பொறியியல் படிப்பில் அரியர் வைத்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வாய்ப்பு வழங்கியுள்ளது. இதன்படி, 2001-02 கல்வியாண்டின் 3வது செமஸ்டரிலிருந்தும், 2002-03 கல்வியாண்டின் முதல் செமஸ்டலிருந்தும் இறுதி செமஸ்டர் வரை அரியர் வைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணத்துடன், கூடுதலாக ரூ.5,000 செலுத்தி coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் டிசம்பர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
* நீலகிரியில் 191 இடங்களில் உள்ள அந்நிய மரங்களை முழுமையாக அகற்ற தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்-வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.
நீலகிரி மாவட்டத்தில் 191 இடங்களில் அந்நிய மரங்கள் அடையாளம் காணப்பட்டன – தமிழக அரசு.
53 இடங்களில் அந்நிய மரங்களை அகற்ற டெண்டர் கோரப்பட்டுள்ளது, 16 இடங்களில் அந்நிய மரங்கள் அகற்றி விற்பனை செய்யப்பட்டுள்ளது – அரசு.
தமிழக வனப்பகுதியில் பரவிக்கிடக்கும் அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள்
4 வாரங்களில் டெண்டர் கோரி, அனைத்து இடங்களிலும் உள்ள அந்நிய மரங்களை முழுமையாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு
* தென்னக ரயில்வேக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கஞ்சிக்கோடு – வாளையாறு வழித்தடத்தில் இரவு நேரங்களில் ரயிலை 30 கி.மீ. வேகத்திலேயே இயக்க வேண்டும். தென்னக ரயில்வேக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
யானைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறினால், கஞ்சிக்கோடு – வாளையாறு வழித்தடத்தில் இரவு நேர ரயில் சேவையை ரத்து செய்ய நேரிடும் – நீதிமன்றம் எச்சரிக்கை
* கள்ளக்குறிச்சி : தச்சூர் அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து.
30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.
மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., மாவட்ட எஸ்.பி. ஆகியோர் நேரில் ஆய்வு.
* மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?
வீடியோ: https://youtu.be/RM2QmmA8zlA
ஒவ்வொரு படிநிலையாக விரிவான விளக்கம்…
* ரூபி மனோகரன் சஸ்பெண்ட் நிறுத்திவைப்பு
காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் மீதான ஒழுங்கு நடவடிக்கையை நிறுத்தி வைக்க காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உத்தரவு
* பா.ஜ.கவின் ஓ.பி.சி. அணியின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் 6 மாதத்திற்கு நீக்கம்.
அவர் நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர் மேல் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால், பொறுப்பு தேடிவரும்- அண்ணாமலை.
