அக்னிப்புரட்சி இன்றைய (24.10.2022) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (24.10.2022) முக்கிய செய்திகள்.
* தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
தீபாவளி திருநாளில் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியும், பிரகாசமும் உண்டாக வேண்டும்
குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அற்புதமான தீபாவளியை கொண்டாட வாழ்த்துகள் – பிரதமர் மோடி
* அனைவருக்கும் அக்னிப்புரட்சி இதழின் சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்……
நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டியது -புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து உற்சாகம்.
மக்கள் அதிகாலையிலேயே எண்ணெய் குளியல் போட்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டாட்டம்.
* டி20 உலகக் கோப்பை சூப்பர்12 சுற்றில் நெதர்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம்; 9 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி.
* துணைவேந்தர்கள் ராஜினாமா செய்யமாட்டார்கள்- முதலமைச்சர் பினராயி விஜயன்.
கேரளாவில் 9 பல்கலைக்கழக துணை வேந்தர்களை ஆளுநர் பதவி விலகக் கூறிய விவகாரம்:
“சுதந்திரமாக செயல்பட வேண்டிய பல்கலைக்கழகங்களின் அதிகாரத்தில் நுழையும் இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆளுநர் செயல்பாடு ஜனநாயக முறையை மீறும் செயலாக உள்ளது-பினராயி விஜயன்,கேரளா முதலமைச்சர்.
* கேரளாவில் துணை வேந்தர்கள் விவகாரத்தில் முதல்வர் ஆளுநர் இடையே வார்த்தை போர் நிகழ்ந்து வரும் நிலையில்,இன்று மாலை 4 மணிக்கு கேரள உயர் நீதி மன்றம் சிறப்பு விசாரணைக்கு அழைப்பு.
9 துணை வேந்தர்களில் 6 பேர் நீதி மன்றத்தை நாடுகிறோம் என ராஜ்பவனுக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல்.
* குலசையில் ராக்கெட் ஏவுதளத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு
”சந்திரயான் 3′ திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க தயாராக உள்ளது. இன்னும் ஒரு சில சோதனைகளே உள்ளன. இந்தியாவின் 2வது ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டினத்தில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக இடம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது. 2 ஆண்டுகளில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறியுள்ளார்.
* திருப்பதியில் ஒரே நாளில் ரூ.6.31 கோடி காணிக்கை வசூல்
கொரோனா ஓய்ந்ததில் இருந்தே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருவதால் உண்டியல் வருமானம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று (23ம் தேதி) ஒரே நாளில் மட்டும் ரூ.6.31 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளது. திருப்பதியில் ஒரே நாளில் இவ்வளவு உண்டியல் காணிக்கை வசூல் செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.
* ரூ.259 கோடிக்கு மது விற்பனை சாதனை அல்ல; அவமானம் – இராமதாசு அய்யா
”தமிழ்நாட்டில் தீப ஒளி திருநாளுக்கு முந்தைய நாளான நேற்று (23ம் தேதி) ஒரே நாளில் ரூ. 259 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது. இது எந்த வகையிலும் சாதனையல்ல; அவமானம். இந்த தொகையை ஆக்கப்பூர்வமாக செலவிடப்பட்டிருந்தால், லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு புத்தாடைகளும், கிடைத்திருக்கும்” என்று பாமக நிறுவனர் இராமதாசு அய்யா கூறியுள்ளார்
* நாளை சூரியகிரகணம் நிகழ்வதை ஒட்டி பழனி கோவில் நடை சாத்தப்படும் விபரம்
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நாளை 25.10.2022 செவ்வாய்க்கிழமை அன்று மாலை சூரிய கிரகணம் 5.21மணிக்கு துவங்கி 6.23மணிவரை நிகழ்வதால், நாளை உச்சிகால பூஜை பகல் 11.30மணிக்கு துவங்கி, தொடர்ந்து காப்புக்கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. தொடர்ந்து மதியம் 2.30மணிக்கு பழனி மலைக்கோவில் மற்றும் உபகோயில்கள் அனைத்தும் திறக்கப்படும். (நடை சாத்தப்படும்)
சூரிய கிரகணம் முடிந்து சம்ரோஷணம் பூஜை சாயரட்சை பூஜை முடிந்து இரவு 7மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
* சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.
வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னை மக்கள் தண்ணீரில் தத்தளிப்பதையும், கண்ணீரில் தவிப்பதையும் தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சாலையோரங்களில் ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டு பாதாள சாக்கடைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் இப்பணியை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இடையே சுணக்கம் ஏற்பட்டு ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்றதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் இப்பணிகள் நிறைவடையுமா? என்ற கேள்வி, சந்தேகம், விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து இப்பணிகள் மீண்டும் வேகம் எடுத்துள்ளன. இந்த நிலையில் இந்த பணிக்காக தெருக்களில் தோண்டப்பட்ட சாலைகள் பல இடங்களில் முறையாக சீரமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பளிச்சென்று காட்சி அளித்த பல சாலைகள் இன்றைக்கு மோசமாகவும், பரிதாபமான நிலையிலும் இருக்கிறது.
* மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி கோரிக்கை
* சென்னை அசோக்நகரில் உள்ள தனியார் மருந்து நிறுவனம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மருந்து கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் கார் மற்றும் சரக்கு ஆட்டோக்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
* இங்கிலாந்தின் புதிய பிரதமராகிறார் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்.
ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக் விரைவில் பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார்.
இங்கிலாந்து நாட்டு மன்னர் 3ம் சார்லஸ் ரிஷி சுனக்கை பிரதமராக நியமனம் செய்தவுடன் அவர் பொறுப்பேற்பார்.
கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
* தீபாவளி கொண்டாட கார்கில் சென்ற பாரத பிரதமர்.
கார்கிலில் உள்ள இந்திய இராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
இந்திய இராணுவ வீரர்களுடன் கலந்துரையாடி தேசம் காக்கும் வீரர்களுக்கு நேரில் சென்று தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்தார் பாரத பிரதமர்
தமிழகத்தை சேர்ந்த இந்திய இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி அவர்கள்
துணைவேந்தர்கள் பணி தொடரலாம்.
கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு.
கேரளாவில் 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தங்கள் பதவியை தொடரலாம்.
9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் பதவியை ராஜினாமா செய்யுமாறு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கெடு விதித்துள்ள நிலையில்
துணைவேந்தர்கள் தொடர்ந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு.
* கேரளாவில் கல்வி முறை சரியில்லை – ஆளுநர் ஆரிப் கான்.
கேரளாவில் துணை வேந்தர்கள் நியமனத்தில் யுஜிசி விதிமுறைகளை பின்பற்றாதது தான் பிரச்சனை.இதை உச்ச நீதிமன்றமும் சுட்டி காட்டி உள்ளது- கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்.
துணைவேந்தர்களுக்கு அடுத்த மாதம் 3ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ராஜினாமா செய்யாததற்கு விளக்கம் கூற வேண்டும்.
கேரளாவில் கல்வி முறை சரியில்லை என்பது தான் என் கருத்து.
திறமையானவர்கள் கேரளாவில் இருக்க விரும்பவில்லை.அவர்கள் வெளியேற முயற்சிக்கின்றனர்; இது கேரளாவின் பிரச்சனை.
திறமையானவர்கள் நாட்டை விட்டு வெளியேறி, திறமையற்றவர்கள் நாட்டை ஆள்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்.
* கார் வெடிப்பில் பலியான பொறியாளர் ஜமேஷா முபின் யார்? வீடு அருகே இருந்த சிசிடிவியில் பதிவான பரபரப்பு காட்சி.
ஜமேஷா வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அதில் கார் வெடிப்பு சம்பவத்திற்கு 5 மணி நேரத்திற்கு முன்பு அவரது விட்டில் இருந்து 5 மர்ம நபர்கள் மர்ம மூட்டைகளை வெளியே தூக்கி வரும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
மூட்டையில் இருந்த மர்ம பொருள் என்ன ஜமேஷா உயிரிழந்து விட்ட நிலையில் அவருடம் இருந்த 4 பேர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகப்பு மற்றும் கண்கானிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
