Home » அக்னிப்புரட்சி இன்றைய (27.11.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (27.11.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (27.11.2022) முக்கிய செய்திகள்.

* உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் கத்தார், போட்டியில் இருந்து வெளியேற்றம்.

செனகல் உடனான போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து, நாக் அவுட் சுற்று வாய்ப்பை இழந்தது.

* வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்றும் நாளையும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

* டிசம்பர் 5ம் தேதி நடைபெறவுள்ள பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்பதற்காக டிசம்பர் 4ம் தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பிரதமரை சந்தித்து தமிழ்நாடு நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்க திட்டம் என தகவல்.

* தாம்பரம் அருகே பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம், வைரம் கொள்ளை.

சேலையூர்-வேளச்சேரி சாலையில் பிரபல நகைக்கடையில் அரங்கேற்றப்பட்ட கொள்ளை சம்பவம்.

மாடியில் இருந்து லிப்ட் வழியாக கடைக்குள் புகுந்து கொள்ளையர்கள் கைவரிசை.

தாம்பரம் அடுத்த கவுரிவாக்கத்தில் புளுஸ்டோன் எனும் நகைக்கடையில் மர்ம நபர்கள் கொள்ளை.

கொள்ளை நடந்த சில மணி நேரத்தில் கொள்ளையளை சுற்றி வளைத்த போலீஸ்; கொள்ளையடிக்கப்பட்ட தங்க, வைர நகைகள் பறிமுதல்.

* பார்ட் பார்ட்டாக டீசல் எஞ்சினை விற்ற திருடர்கள்!

கரஹாரா ரயில்வே பணிமனையில், சுரங்கம் அமைத்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த எஞ்ஜினின் பாகங்களை ஒவ்வொன்றாக திருடி இரும்புக்கடையில் விற்ற 3 திருடர்கள் கைது!

விசாரணையை தொடர்ந்து இரும்புக்கடையை சோதனையிட்டதில், 13 மூட்டைகளில் எஞ்சின் உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன

* உலக அரங்கில் இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற வேண்டும் அனைத்து துறைகளிலும் இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர் – பிரதமர் மோடி

உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் அரசியல் சாசன தின விழாவில் பிரதமர் மோடி உரை

மின்னணு நீதிமன்ற திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்கள், பாதுகாப்பு வீரர்களுக்கு என் அஞ்சலி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் அரசியல் சாசன தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அரசியல் சாசனத்தின் சிறப்புகளுடன் மும்பை பயங்கரவாத தாக்குதலையும் நினைவுகூர்ந்து பிரதமர் உரையாற்றினார்.

இந்தியா ஜனநாயகங்களின் தாய் என்ற தலைப்பில் அரசியல் சாசன தின நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்.

பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 25.30 மணி நேர கவுன்ட் டவுன் வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய நிலையில், இன்று காலை 11.56 மணிக்கு விண்ணில் புறப்பட்டது. 

* பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டம் சென்னை மாநகர பேருந்துகளில் துவக்கம்

மின்சார ரயில்களை போலவே, பேருந்துகளிலும் நிறுத்தம் பற்றிய ஒலி அறிவிப்பு

தமிழ், ஆங்கிலத்தில் அடுத்து வரக்கூடிய நிறுத்தம் குறித்து பயணிகளுக்கு அறிவிக்கப்படும்

* இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு- திமுக நிர்வாகி தற்கொலை

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே 85 வயது முதியவர் தங்கவேல் தற்கொலை

தாழையூர் திமுக கிளை அலுவலகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை

* தாம்பரம் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் 3 இளம் சிறார்கள் கைது

அசாமை சேர்ந்த 3 சிறார்களையும் கைது செய்து போலீசார் விசாரணை

ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் பறிமுதல்

* தொண்டர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசின் செவிகளுக்கும், இதயத்துக்கும் எட்டும்வரை நாம் ஓயப்போவதில்லை

ஏற்கனவே ஏராளமான தீரர்களை இழந்துவிட்டோம்; இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது

போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

* 166 பேரை கொன்று குவித்த மும்பை தாக்குதல் நடந்து 14 ஆண்டுகள் நிறைவு: வெளியுறவு அமைச்சர் உருக்கம்

புதுடெல்லி: மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடந்து இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பரபரப்பு பதிவை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானின் லக்‌ஷர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாத கும்பல், கடந்த 2008ம் ஆண்டு நவ. 26ம் தேதி கடல்மார்க்கமாக மும்பை நகருக்குள் ஊடுருவி பல குழுக்களாக பிரிந்து மும்பையின் முக்கிய இடங்களில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர்.

ரயில் நிலையம், ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், தாஜ் ஓட்டல், லியோபோல்டு கபே, காமா மருத்துவமனை, நரிமன் ஹவுஸ் ஆகிய இடங்களிலும் தாக்குதலை அரங்கேற்றினர்.

மொத்தம் 12 இடங்களில் கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தொடர்ச்சியாக 4 நாட்கள் நீடித்த இந்த கோர தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், வெளிநாட்டினர், போலீசார் உள்பட 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 300க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். தீவிரவாதி அஜ்மல் கசாப்பை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மற்ற 9 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிடிபட்ட அஜ்மல் கசாப்பு 2012ல் புனே ஏரவாடா ஜெயிலில் தூக்கில் போடப்பட்டான். பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் 26/11 என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது.

தாக்குதல் சம்பவம் நடந்து இன்றுடன் (சனிக்கிழமை) 14 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மும்பை மக்கள் இன்று அஞ்சலி செலுத்தினர். இருப்பினும் மக்களின் மனதில் ஏற்பட்ட வலியும், துயரமும் நீங்கவில்லை. மும்பை மட்டும் இன்றி உலகில் எங்கும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறக்கூடாது என்பதே அனைத்து தரப்பு மக்களின் பிரார்த்தனையாக உள்ளது.

TELEGRAM: t.me/Agnipuratchi1

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று வெளியிட்ட பதிவில், ‘தீவிரவாதம் மனித குலத்தை அச்சுறுத்துகிறது. இன்று, 26/11ல் பாதிக்கப்பட்டவர்களை இந்தியா நினைவுகூருகிறது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்களின் பின்னணியில் இருந்தவர்களை, நீதியின் முன் நிறுத்த வேண்டும். உலகம் முழுவதும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருடனும் இந்தியா உள்ளது’ என்று கூறியுள்ளார்.

* சபரிமலை தரிசனத்துக்கு 8.79 லட்சம் பேர் முன்பதிவு

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு வரும் 30ம் தேதி வரை ஐயப்ப தரிசனத்திற்கு 8.79 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 1.2 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் http://www.sabarimalaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

* குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: பாஜக வாக்குறுதி!

பொது சிவில் சட்டம், கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி

9-12 வகுப்பு வரை அனைத்து மாணவிகளுக்கு சைக்கிள்

வயதான பெண்களுக்கு இலவசமாக பேருந்தில் பயணம் செய்ய அனுமதி உள்ளிட்ட 40 முக்கிய வாக்குறுதிகள் வெளியீடு!

குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

* பணவீக்கத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தான் எடுத்த முடிவு

பாகிஸ்தானில் பணவீக்க அழுத்தங்கள் எதிர்பார்த்ததை விட மிக மோசமாக இருந்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் மத்திய வங்கி அதன் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதாவது பென்சமார்க் வட்டி விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் சுமார் 1% அதிகரித்து 16% ஆக உயர்த்தியுள்ளது. பணவீக்கத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

* பொன்னேரி மீஞ்சூர் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மீஞ்சூர் நெடுஞ்சாலையில் அனல் மின் நிலையங்கள், பல்வேறு தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் செல்வதால் மேற்கண்ட சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது.

மேலும் தொடர் விபத்துகளும் நடக்கிறது. இதனால் பொதுமக்களின் தொடர் புகார் காரணமாக திங்கள் முதல் மேற்கண்ட சாலையில் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது எனவும், அனைத்து வாகனங்களும் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

* கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற இளைஞரை இழுத்து சென்ற முதலை.

கடலூர்: சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர் திருமலையை முதலை இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வடக்கு வேளக்குடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் திருமலையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

* மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அனைத்து பிரிவு மின்வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் – அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அனைத்து மின் அலுவலகங்களிலும் வரும் 28ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் இலவசமாக வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் மின்சாரத்தில், எந்த மாற்றமும் இல்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி.

* கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற இளைஞரை இழுத்து சென்ற முதலை.

வீடியோ: https://twitter.com/IndiaNewsDigest/status/1596483254286442497?t=46_5GyWjTAYhdgr8ZlsOYA&s=19

கடலூர்: சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர் திருமலையை முதலை இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வடக்கு வேளக்குடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் திருமலையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

* ஆதார் கார்டுடன் இணைக்காவிட்டால், உங்கள் பான்கார்டு காலாவதியாகிவிடும்: வருமானவரித் துறை எச்சரிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு கடந்த மார்ச் 31ம் தேதியே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆதார்-பான் எண் இணைப்பு கட்டாயம் என்றும், அதன்பின்னர் முதல் மூன்று மாதத்திற்குள் பான் எண்ணை இணைக்காவிட்டால் 500 ரூபாய் அபராதம், அதன்பிறகு அபராத தொகை 1000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இது விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும். இல்லையெனில் ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டு செயலிழந்துவிடும். எனவே தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும்.! என்று தெரிவித்து உள்ளது.  

TELEGRAM: t.me/Agnipuratchi1

* பிஎஸ்எல்வி சி – 54 ராக்கெட் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டது’: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!..

ஆந்திரா: பிஎஸ்எல்வி சி – 54 ராக்கெட் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர், சரியான திசைவேகத்தில் ராக்கெட் செல்கிறது. இஸ்ரோ ஏவிய பிஎஸ்எல்வி சி – 54 ராக்கெட் வெற்றிகரமாக 9 செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியது.

ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் தளத்தில் இருந்து பாய்ந்த ராக்கெட் ஏவுதல் வெற்றிபெற்றது என்று கூறினார்.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* கனமழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் ஆச்சியால்புரம், குதிரைக்குத்தி, வேட்டங்குடி, நெய்தவாசல் பகுதிகளில் கடும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.

* செயற்கை நீர்வீழ்ச்சி விவகாரம்: கோர்ட்டின் உத்தரவால் களத்தில் இறங்கிய அதிகாரிகள்…!

உயர் நீதி மன்ற உத்தரவு படி தென்காசி மாவட்டத்தில் உள்ள செயற்கை நீர்வீழ்ச்சிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்..

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இயற்கை நீர்வீழ்ச்சிகள் இருக்கும் நிலையில் ஒருசில விடுதிகள் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாகியுள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிய தனியார் விடுதிகளை உடனடியாக மூடுங்கள் என உத்தரவிட்டனர்.

மேலும் செயற்கை நீர்வீழ்ச்சி குறித்த அறிக்கைகளை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு உள்ள செயற்கையான நீர்வீழ்ச்சிகள் குறித்து ஆய்வு நடத்த மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த வகையில், குண்டாறு பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகள் மற்றும் செயற்கை நீர்வீழ்ச்சிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். இதுதொடர்பான அறிக்கையை இவர்கள் மாவட்ட கலெக்டரிடம் சமர்பிப்பர்.

இந்த அறிக்கையை மாவட்ட கலெக்டர் ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு அனுப்பிவைப்பார் என்று கூறப்படுகின்றது.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* கடைகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வகையில் இரண்டு குப்பை தொட்டிகளை விரைந்து வைக்க வேண்டும்

இரண்டு குப்பை தொட்டிகள் வைக்காத கடைகளின் உரிமையாளர்களுக்கு இதுவரை ரூ.1.04 லட்சம் அபராதம் விதிப்பு: சென்னை மாநகராட்சி

* FIFA கால்பந்து – ஆஸ்திரேலியா வெற்றி

FIFA கால்பந்து உலகக்கோப்பை – துனிசியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

error

Enjoy this blog? Please spread the word :)