Home » சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 42 பேர் டெல்லியில் கைது

சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 42 பேர் டெல்லியில் கைது

42 people involved in cyber crimes arrested in Delhi

புதுடெல்லி:  ஏடிஎம் மோசடி, டிஜிட்​டல் கைது உட்பட சைபர் குற்​றங்​களில் டெல்​லியை சேர்ந்த ஒரு கும்​பல் ஈடு​பட்​டுள்​ளது. இவர்​கள் டெல்​லி, உத்தர பிரதேசம் ஹரி​யா​னா, மும்​பை, கொல்​கத்​தாவைச் சேர்ந்​தவர்​களிடம் ரூ.245 கோடிக்கு மேல் மோசடி செய்​துள்​ளனர். இது தொடர்​பாக டெல்லி போலீ​ஸார் 23 வழக்​கு​களை பதிவு செய்​​தனர்.

இந்த கும்​பலை பிடிக்க ‘ஆபரேஷன் சைஹாக்’ என்ற நடவடிக்​கை​யில் டெல்லி போலீ​ஸார் இறங்​கினர். கிசன்​கர் பகு​தி​யில் உள்ள 4 தனி​யார் வங்கி கணக்​கு​கள் மூலம் சைபர் மோசடி நடை​பெற்​றது கண்​டறிப்​பட்​டது. இதன் அடிப்​படை​யில் மேற்​கொள்​ளப்​பட்ட விசா​ரணை​யில் அஸ்​கர் அலி, அங்​கித் சிங் ஆகியோர் முதலில் கைது செய்​யப்​பட்​டனர். இவர்​களிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை மூலம் மோசடி​யின் பின்​னணி​யில் செயல்​பட்ட ரவி குமார் சிங் என்​பவர் கைது செய்​யப்​பட்​டார்.

கோட்லா முபாரக்​பூரில் கால் சென்​டர்​களை நடத்​திய சிலரும் கைது செய்​யப்​பட்​டனர். இவர்​களிடம் இருந்து கம்ப்​யூட்​டர், லேப்​டாப்​கள், செல்​போன்​கள், மோசடி பணப் பரி​மாற்​றங்​கள் விவரங்​கள் அடங்​கிய பதிவேடு ஆகியவை பறி​முதல் செய்​யப்​பட்​டன. மந்​த​வாலி மற்​றும் நஜாப்​கர் ஆகிய பகு​தி​களி​லும் சோதனை நடத்​தப்​பட்டு பலர் கைது செய்​யப்​பட்​டனர். இந்த ஆபரேஷனில், சைபர் குற்​றங்​களில் ஈடு​பட்ட 42 பேர் கைது செய்​யப்​பட்​டனர்​.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)