Home » செயற்கைக்கோள் மூலம் 100% நெட்வொர்க் கவரேஜ்: 1,600 செயற்கைக்கோள்களுடன் புதிய திட்டத்தைக் களமிறக்கும் ஜியோ நிறுவனம்!

செயற்கைக்கோள் மூலம் 100% நெட்வொர்க் கவரேஜ்: 1,600 செயற்கைக்கோள்களுடன் புதிய திட்டத்தைக் களமிறக்கும் ஜியோ நிறுவனம்!

செயற்கைக்கோள் மூலம் 100% நெட்வொர்க் கவரேஜ்: 1,600 செயற்கைக்கோள்களுடன் புதிய திட்டத்தைக் களமிறக்கும் ஜியோ நிறுவனம்!
செயற்கைக்கோள் மூலம் 100% நெட்வொர்க் கவரேஜ்: 1,600 செயற்கைக்கோள்களுடன் புதிய திட்டத்தைக் களமிறக்கும் ஜியோ நிறுவனம்!

புதுடெல்லி (அக். 10, 2026):

இந்தியா முழுவதும் நூறு சதவீத நெட்வொர்க் கவரேஜ் வழங்கும் நோக்கில், 1,600 செயற்கைக்கோள்கள் மற்றும் 23 தரை நிலையங்களைக் கொண்ட புதிய தொழில்நுட்பக் கட்டமைப்புத் திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

  • இறைமை செயற்கைக்கோள் இணைப்புத் திட்டம்:
    • இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, மொபைல் டவர்கள் மற்றும் ஃபைபர் கேபிள்களை மட்டுமே நம்பியிராமல், செயற்கைக்கோள்கள் மூலம் தனது சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
    • வழக்கமான தொலைத்தொடர்பு கட்டமைப்பை உருவாக்குவது கடினமான இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளைச் சென்றடைவதற்காக, தரைவழி வலையமைப்புடன் செயற்கைக்கோள்களை இணைக்கும் கலப்பு அமைப்பை ‘இறைமை செயற்கைக்கோள் இணைப்பு’ என்ற பெயரில் ஜியோ முன்னிறுத்துகிறது.
  • 6 லட்சம் கிராமங்கள் மற்றும் எல்லைப்புறப் பயனன்கள்:
    • இந்த புதிய அமைப்பின் மூலம் இந்தியாவின் 6 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்கள், நிலப்பரப்புகள் மற்றும் கடல் பகுதிகள் அனைத்தும் 100 சதவீத நெட்வொர்க் கவரேஜ் பெறும் என ஜியோ தெரிவித்துள்ளது.
    • குறிப்பாக தொலைதூரப் பகுதிகள், தீவுகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் இச்சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • திட்டத்தின் சிறப்பம்சங்களும் காலக்கெடுவும்:
    • தனித்தனி அமைப்பாக இல்லாமல், தனது தற்போதைய மொபைல் மற்றும் ஃபைபர் கட்டமைாப்புடன் இந்தச் செயற்கைக்கோள் வலையமைப்பை ஜியோ ஒருங்கிணைக்கவுள்ளது. வணிக நிறுவனங்கள், கிராமப்புறங்கள், விமானப் போக்குவரத்து, கடல்சார் துறை, அரசு, பாதுகாப்புத் துறை மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகள் ஆகியவற்றில் இது பயன்படும்.
    • மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கு மற்றொரு மைல்கல்லாகக் கருதப்படும் இத்திட்டம், பல்வேறு கட்டங்களாகச் செயல்படுத்தப்பட உள்ளது.
    • அதன்படி, அடுத்த ஆண்டு செப்டம்பரில் ஒரு சோதனை முயற்சியை நடத்தவும், 2030-க்குள் 400 முதல் 450 செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 2035-க்குள் முழுமையான 1,600 செயற்கைக்கோள் தொகுப்பையும் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • பின்னணி: இந்தியாவில் வணிகரீதியான செயற்கைக்கோள் இணைய சேவைகளைத் தொடங்குவதற்கான ஒப்புதல்களுக்காக எலான் மஸ்க்கின் ‘ஸ்டார்லிங்க்’ நிறுவனம் காத்திருக்கும் வேளையில், ஜியோவின் இந்த அதிரடி அறிவிப்பு தொலைத்தொடர்பு துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)